போரை நிறுத்தினால் மட்டுமே பணையக்கைதிகள் விடுதலை! – இஸ்ரேலுக்கு ஹமாஸ் எச்சரிக்கை!

Webdunia
வெள்ளி, 29 டிசம்பர் 2023 (10:41 IST)
காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதலை நடத்தி வரும் நிலையில் போரை நிறுத்தினால் மட்டுமே பணையக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என ஹமாஸ் எச்சரித்துள்ளது.



இஸ்ரேல் – பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த மூன்று மாத காலமாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் முதல் தாக்குதலை ஹமாஸ் தொடங்கி இருந்தாலும் அதன்பின்னர் இஸ்ரேல் காசா மீது மேற்கொண்டு வரும் தாக்குதலால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.

கடந்த மாதம் நடத்தப்பட்ட குறுகிய கால போர் நிறுத்தத்தின் போது இரு தரப்பிலும் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அதன்பின்னர் தற்போது மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ள இஸ்ரேல் ராணுவம் உலக நாடுகள் போரை நிறுத்தக் கோரியும் கேட்காமல் தொடர்ந்து காசாவை தாக்கி வருகிறது.

இந்நிலையில் இஸ்ரேலை எச்சரித்துள்ள ஹமாஸ், இஸ்ரேல் போரை நிறுத்தினால் மட்டுமே பணையக்கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளது. அதேசமயம் இஸ்ரேலோ ஹமாஸால் ஆபத்தில்லாத சூழல் ஏற்படும் வரை போர் நடைபெறும் என கூறியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்