கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, ஹமாஸை ஒழிக்க இஸ்ரேல் உறுதியெடுத்து, தொடர்ந்து பாலஸ்தீன காசா முனையில் ஏவுகணை வாயிலாகவும், தரைவழியாகவும், தாக்குதல் நடத்தி வருகிறது.
இரு தரப்பிற்கும் இடையிலான போரில் பலரும் பாதிக்கப்பட்டுள்ளள நிலையில் இப்போரை நிறுத்த உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால், இஸ்ரேல் பிரதமர் தொடர்ந்து தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளார். காஸா மீது இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் இதுவரை 10569 பாலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 214 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாகவும், காஸாவில் இருந்து 70% மக்கள் வீடுகளை விட்டு விட்டு ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகளில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.