ஹிஜாப் பிரச்சினை; ட்ரெஸ்ஸே போடாமல் கல்லூரிக்குள் நடமாடிய மாணவி!

Prasanth Karthick
ஞாயிறு, 3 நவம்பர் 2024 (14:16 IST)

ஈரானில் ஹிஜாப் பிரச்சினை நாளுக்கு நாள் வலுத்து வரும் நிலையில் பல்கலைக்கழக வளாகத்தில் பெண் ஒருவர் ஹிஜாப் உள்ளிட்ட ஆடைகளை கழற்றிவிட்டு உள்ளாடையுடன் சுற்றி திரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

ஈரானில் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக உள்ள நிலையில் கடந்த 2022ம் ஆண்டில் மாஷா அமினி என்ற பெண், ஹிஜாப் அணியும் முறையை சரியாக பின்பற்றவில்லை என தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். அதை தொடர்ந்து ஈரானில் ஹிஜாபிற்கு எதிராக பெரும் போராட்டம் வெடித்தது.

 

அதுமுதலாக ஆங்காங்கே ஹிஜாப் பிரச்சினை அடிக்கடி தலைதூக்கி வருகிறது. சமீபத்தில் ஈரானில் உள்ள இஸ்லாமிக் ஆசாத் பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவி ஒருவர் சரியாக ஹிஜாப் அணியாததாக அவரது ஆசிரியர் இழிவுப்படுத்தி தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த செய்கைக்கு கண்டனம் தெரிவித்து அந்த மாணவி ஹிஜாப் உள்ளிட்ட ஆடைகள் அனைத்தையும் கழற்றிவிட்டு உள்ளாடையுடன் பல்கலைக்கழக வளாகத்தில் அனைவரும் பார்க்கும்படி அமர்ந்துள்ளார்.

 

இதை அங்கிருந்த வேறு சில மாணவர்களும் வீடியோ எடுத்து ஷேர் செய்ததால் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது. அந்த மாணவி கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மன அழுத்த பிரச்சினைகளுக்கு உள்ளாகியிருப்பதால் அவ்வாறு நடந்து கொண்டிருப்பதாக பல்கலைக்கழகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்