ஆணுறுப்பில் மோதிரம் மாட்டிய நபர்: கட் செய்த மருத்துவர்கள்

Webdunia
வெள்ளி, 30 ஜூன் 2017 (06:20 IST)
கைவிரல்களில் மோதிரம் அணியும் நபர்களை பார்த்திருக்கின்றோம். சில பகட்டு மனிதர்கள் கைகளில் உள்ள பத்து விரல்களிலும் மோதிரம் அணிந்து கொள்வதுண்டு. ஆனால் தாய்லாந்தை சேர்ந்த ஒருவர் ஆணுறுப்பில் மோதிரம் மாட்டியுள்ளார். இதனால் அவர் அடைந்த அவஸ்தைகளுக்கும் அளவில்லை



 
 
தாய்லாந்தை சேர்ந்த விராட் என்பவர் விளையாட்டிற்காக தனது ஆணுறுப்பில் இரண்டு மோதிரங்களை அணிந்துள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து மோதிரங்களை கழட்ட முயற்சித்தபோது அவற்றை கழட்ட முடியவில்லை. 
 
மேலும் நேரம் ஆக ஆக ஆணுறுப்புக்கு செல்ல வேண்டிய ரத்தம் தடைபட்டதால் வலியால் துடித்தார். பின்னர் வேறு வழியின்று மருத்துவமனைக்கு செல்ல மருத்துவர்கள் ஆணுறுப்பில் மாட்டியிருந்த மோதிரத்தை வெட்டி எடுத்து அவரை பிழைக்க வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்