அதிக குழந்தைகள் பெற்றுக்கொண்டால் வரிகள் தள்ளுபடி - சீனா அரசு அதிரடி

Webdunia
புதன், 17 ஆகஸ்ட் 2022 (20:25 IST)
சீனாவில் அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டால்  அவர்களுக்கு வரி தள்ளுபடி செய்யப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

உலகில் அதிக மக்கள் கொண்ட நாடாக சீனா முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையில்  நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் மக்கள் தொகையைக் குறைக்க அரசு பல்வேறு   நடவடிக்கைகள் எடுத்தது. அதில்,ஒரு குழந்தை விதி என்பது முக்கியமானது.

இதனால் சீனாவில் பிறப்பு விகிதம்  ஆண்டிற்கு ஆண்டு குறைந்தபடி இருந்தது, இது அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,  கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரு குழந்தை விதி அங்கு ரத்து செய்யப்பட்டு ஒருவர் 3 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள அனுமதி அளிகப்பட்டது.

இருப்பினும் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை. எனவே,  அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டால் மானியம், வரிகள் வரி தள்ளுபடி உள்ளிட்ட அறிவிப்புகளை சீன அரசு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்