வெளிநாட்டினர் அச்சப்பட வேண்டாம், தூதரங்களுக்கு பாதுகாப்பு: தாலிபான்கள் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (21:08 IST)
ஆப்கானிஸ்தானில் வாழும் வெளிநாட்டவர் பயப்படத் தேவையில்லை என்றும் ஆப்கனில் உள்ள தூதரங்கள் அனைத்திற்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் தாலிபான்கள் அறிவித்துள்ளனர் 
 
ஆப்கன் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அந்நாட்டின் அதிபர் ஆப்கான் நாட்டை விட்டு வெளியேறி விட்டார். இந்த நிலையில் ஆப்கன் நாட்டிலிருந்து அந்நாட்டு மக்களும் வெளி நாட்டு மக்களும் பிற நாடுகளுக்கு செல்லும் நிலையில் உள்ளனர் 
 
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து நாடுகளின் தூதரகங்களுக்கும் பாதுகாப்பு அளிப்போம் என்றும் ஆப்கன் நாட்டிலுள்ள வெளிநாட்டவர் அச்சப்படத் தேவையில்லை என்றும் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற கட்டாயமில்லை என்றும் தாலிபான்கள் அறிவிப்பு செய்துள்ளனர் 
 
இருப்பினும் தாலிபான்கள் அச்சுறுத்தல் காரணமாக இந்தியா உள்பட அனைத்து நாடுகளின் தூதரகங்கள் மூடப்பட்டன என்பதும் வெளிநாட்டினர் ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்