இந்த தகவலை அந்நாட்டில் பிரபலமான டோலோ டிவி செய்திப்பிரிவு தலைமை நிர்வாகி தமது ட்விட்டர் பக்கம் வாயிலாக பகிர்ந்துள்ளார். அதில், தாலிபன் ஊடகப்பிரிவு உறுப்பினர் ஒருவருடன் நேரலையில் பெண் தொகுப்பாளர் நேர்காணல் செய்யும் காட்சியின் படம் பகிரப்பட்டுள்ளது. இது தவிர செய்தி அறையின் காலை கூட்டத்தில், பெண் செய்தியாளர்கள் ஹிஜாப் அணிந்து கொண்டு பங்கேற்கும் படத்தையும் தனியாக அவர் பகிர்ந்துள்ளார்.