ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்ய அனுமதி: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Webdunia
வியாழன், 25 மே 2017 (16:38 IST)
உலகம் முழுவதும் இந்த பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. ஒரே இனத்தை சேர்ந்த நபர் மீது ஈர்ப்பு ஏற்பட்டு அந்த காதல் தவிற்கமுடியாத ஒன்றாக மாறி இருவரும் திருமணம் செய்துகொள்ள முன்வரும் போது சட்டம் அதற்கு தடையாக இருக்கும்.


 
 
பல நாடுகள் இந்த ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்தை எதிர்த்தும், ஆதரித்தும் வருகிறது. ஆசிய நாடுகளில் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு அனுமதியே இல்லை. எதிர் பாலினத்தினர் மீது மட்டுமே ஈர்ப்பு கொள்ள வேண்டும். ஒரே பாலினம் மீது வந்தால் அது இயற்கைக்கு எதிரானது எனவும், அது கலாச்சார சீரழிவு எனவும் பல நாடுகள் இதனை தொடர்ந்து எதிர்த்து வருகிறது.
 
இந்நிலையில் தைவான் நாட்டு நீதிமன்றம் ஓரினச் சேர்க்கையாளர்கள் சட்டப்படி திருமணம் செய்துகொள்ளலாம் என்ற அனுமதியை வழங்கியுள்ளது. ஆசியாவிலேயே ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு இந்த சட்ட அங்கீகாரத்தை வழங்கியிருப்பது தைவான் நாடு மட்டுமே.
 
திருமணம் செய்து கொள்ள விரும்பும் அனைவருக்கும் அதற்கான சுதந்திரம் உண்டு. இரண்டு பேர் தங்கள் பந்தத்தை நிரந்தரமாகத் தொடர அவர்கள் சட்டப்பூர்வமாகத் திருமணத்தைப் பதிவு செய்துகொள்ள உரிமை உண்டு எனத் தைவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்