இலங்கை நாடாளுமன்றம் கலைப்புக்கு தடை: உச்சநீதிமன்றம் அதிரடி

Webdunia
செவ்வாய், 13 நவம்பர் 2018 (20:00 IST)
சமீபத்தில் இலங்கை அதிபர் சிறிசேனா, அந்நாட்டின் நாடாளுமன்றத்தை திடீரென கலைத்தார். இதனையடுத்து வரும் ஜனவரியில் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தை கலைத்ததை எதிர்த்து ரணில் விக்ரமசிங்கே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு, அந்நாட்டு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

இலங்கை உச்சநீதிமன்றத்தின் இந்த தடை உத்தரவு, நாட்டு மக்களுக்கு கிடைத்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றி என பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். மேலும் ஜனநாயகத்திற்கு எதிராக செயல்பட்டவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாகவும், நாளையே நாடாளுமன்றத்தை கூட்டினாலும், பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்

இந்த நிலையில் இலங்கை உச்சநீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவை எதிர்த்து, ராஜபக்சே அணியினர் வரும் 19ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்