பட்டாசு உற்பத்தியில் மூலப்பொருட்களாக பயன்படுத்தப்படும் அலுமினியம் பாஸ்பேட், பொட்டாஷியம் நைட்ரேட், பச்சை பேரியம் நைட்ரேட், ஸ்ட்ராங்ஷியம் நைட்ரேட், அலுமினிய கம்பி, அலுமினியம் பவுடர், மெக்னீஷியம், மெக்னாலியம், பெர்ரோ டைட்டானியம், பொட்டாஷியம் நைட்ரேட், பேரியம், கரித்தூள் போன்றவற்றைப் பயன்படுத்த தடை விதித்தது. இந்த ரசாயணங்களால் வெளியாகும் புகையால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
இந்த முடிவு பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு ஒரு பேரிடியாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல் இந்தாண்டு பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட நேரக்கட்டுப்பட்டால் வரலாறு காணாத அளவில் பட்டாசு விற்பனை குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதானால் தாங்களாகவே முன்வந்து ஆலைகளை மூட முடிவு செய்துள்ளதாக பட்டாஉ உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அரசுக்கும் தொழிலாளர் நல வாரியத்துக்கும் தகவல் அனுப்பியுள்ளதாகக் கூறியுள்ளனர்.
நாட்டின் மொத்த பட்டாசு உற்பத்தியில் கிட்டதட்ட 95 சதவீதம் பட்டாசுகள் தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலைகளில் இருந்தே உற்பத்தி செய்யப்படுகிறது. கிட்டதட்ட 1000 தொழிற்சாலைகளில் வேலை செய்து வரும் பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிப்புக்க்குள்ளாகும் சூழல் உருவாகியுள்ளது. இத்தகைய கடும் கட்டுப்பாடுகளால் சிறிய அளவில் பட்டாசு தொழிலில் ஈடுபடுவோரின் நிலைமை கவலைக்கிடமாகியுள்ளது.