இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு!...நள்ளிரவில் கையெழுத்திட்ட சிறிசேனா

சனி, 10 நவம்பர் 2018 (07:00 IST)
இலங்கை நாடாளுமன்றத்தை கலைக்கும் உத்தரவில் அதிபர் சிறிசேனா நள்ளிரவில் கையெழுத்திட்டதாகவும், அந்நாட்டில் பொதுத்தேர்தல் வரும் ஜனவரியில் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே சமீபத்தில் பதவிநீக்கம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக மஹிந்தா ராஜபக்சே பிரதமராக பதவியேற்றார். ஆனால் சபாநாயகர் ஜெயசூர்யா, ரணில் பிரதமராக நீடிப்பார் என அறிவித்ததால் ஒரு நாட்டுக்கு இரண்டு பிரதமர்களா? என்ற குழப்பநிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் நவம்பர் 14ஆம் தேதி ராஜபக்சே தனது பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் நிரூபிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் நாடாளுமன்றம் கூட நான்கு நாட்களே இருக்கும் நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென நாடாளுமன்றத்தை கலைக்கும் உத்தரவில் அதிபர் சிறிசேனா கையெழுத்திட்டார். இருப்பினும் அதிபர் சிறிசேனவின் இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக ரணில் விக்கிரமசிங்கே தரப்பு தெரிவித்துள்ளது

இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை அடுத்து ஜனவரியில் தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை இலங்கை தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என்றும் கூறப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்