லிட்டருக்கு 1,153 கி.மீ செல்லும் கார்; அசத்திய மாணவர்கள்

Webdunia
செவ்வாய், 3 அக்டோபர் 2017 (16:47 IST)
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் கண்டுபிடிப்பு உலகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.


 

 
பிரான்ஸ் லாவல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் வாகனம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த வாகனம் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பு லிட்டருக்கு 1,153 கி.மீ செல்லும் திறனுடன் இருப்பதால் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 
 
இந்த வாகனம் பெட்ரோல் எரிபொருளில் இயங்கும் புரோட்டோ டைப் கார். இந்த கார் மிக இலகுவான எடை காரணமாக காற்றைப் பயன்படுத்தி இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதால் அதிக அளவு மைலேஜ் தருகிறது. மணிக்கு அதிகப்பட்சம் 32 கி.மீ வேகத்தில் செல்லும். 
 
தற்போது இந்த கார்கள் சோதனை அடிப்படையில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வடிவமைப்பிலான கார்கள் ஒருசில ஆண்டுகளில் பொதுமக்கள் பயன்படுத்தும் வண்ணம் சந்தையில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் இந்த வகையான கார்கள் இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கு ஏற்றதாய் இருக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்