2017ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

திங்கள், 2 அக்டோபர் 2017 (17:43 IST)
2017ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் இன்று அறிவிக்கப்பட்டது.


 

 
ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் நோபல் பரிசு குழுத் தலைவர் தாமஸ் பெர்ல்மன் 2017ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசை அறிவித்தார். மூன்று பேருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஜெஃப்ரி சி.ஹால், மைக்கேல் ராஸ்பாஸ், மைக்கேல் யங் ஆகிய மூன்று பேர் மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மூலக்கூறுகளின் செயல்பாடுகள் பற்றிய ஆய்வுக்காக நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது. 
 
சர்க்காடியன் கடிகாரம், நமது ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக உள்ள உயிர் கடிகாரம் பற்றிய கண்டுபிடிப்புக்காகவும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பரிசுத் தொகை ரூ.7 கோடியை மூன்று பேருக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்