தினகரனை கைது செய்ய தனிப்படை அமைப்பு: விஸ்வரூபம் எடுக்கும் தேச துரோக வழக்கு!

Webdunia
செவ்வாய், 3 அக்டோபர் 2017 (16:26 IST)
தமிழக அரசுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக துண்டு பிரசுரங்கள் விநியோகித்ததால் டிடிவி தினகரன் மீதும் அவரது ஆதரவாளர்கள் மீதும் தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.


 
 
இந்த வழக்கு தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளதையடுத்து தினகரனை கைது செய்ய தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே இந்த வழக்கில் தினகரன் ஆதரவு முன்னாள் எம்எல்ஏ ஒருவர் கைதாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
சேலத்தில் தினகரன் தரப்பினர் துண்டுச்சீட்டு வழங்கியதாகவும், அதில் நீட் தேர்வுக்கு எதிராகவும், பிரதமர் மோடி மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து சர்ச்சைக்குரிய வாசகங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
எனவே இந்திய இறையாண்மைக்கு எதிராக துண்டுபிரசுரம் விநியோகித்த வழக்கு ஒன்று சேலம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த  வழக்கில் தினகரன் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இந்த வழக்கின் அடிப்படையில் அவர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் நேற்று இரவு முதலே கைது செய்யப்பட உள்ளதாக தகவல்கள் பரவின. இதனையடுத்து சென்னை அடையாரில் உள்ள தினகரன் இல்லத்தில் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.
 
இந்நிலையில் டிடிவி தினகரன், அவரது ஆதரவாளர் புகழேந்தியை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
அடுத்த கட்டுரையில்