பள்ளியில் ஓய்வெடுத்தால் ரூ.7500 கட்டணம்.. பள்ளி நிர்வாக அறிவிப்பால் பெற்றோர் அதிர்ச்சி..!

Webdunia
வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (07:41 IST)
பள்ளியில் மதிய நேரத்தில் மாணவர்கள் ஓய்வெடுத்தால் மாதம் ரூபாய் 7500 கட்டணம் என சீனாவில் உள்ள ஒரு பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது பெற்றோர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
சீனாவில் உள்ள குவாங்டாங் என்ற மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மதிய உணவுக்கு பிறகு சிறிது நேரம் ஓய்வு எடுக்கலாம் என்றும் அதற்காக பாய் மெத்தை உட்பட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது 
 
ஆனால் அதே நேரத்தில்  மதிய உணவுக்கு பிறகு ஓய்வு எடுக்கும் மாணவர்கள் 7500 வரை கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது வியாபார நோக்கம் கொண்டது என்றும் இந்த திட்டத்திற்கு பல பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் 
 
ஆனாலும் பள்ளி நிர்வாகம் பின் வாங்காமல் இந்த கட்டணத்தை தொடர்ந்து வசூலித்து வருவதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்