பட்டம் விட போய் பட்டத்தோடு பறந்த இளைஞர்! – இலங்கையில் வினோத சம்பவம்!

Webdunia
புதன், 22 டிசம்பர் 2021 (09:28 IST)
இலங்கையில் பட்டம் விட இளைஞர்கள் முயன்றபோது இளைஞர் ஒருவர் பட்டத்துடன் பறந்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் யாழ்ப்பாணம் பகுதியில் இளைஞர்கள் சிலர் இணைந்து ராட்சத பட்டம் ஒன்றை தயாரித்துள்ளனர். அதை பறக்கவிட காற்று நன்றாக வீசும் பகுதிக்கு அவர்கள் சென்றுள்ளனர். அங்கு பல இளைஞர்கள் சேர்ந்து பட்டத்தின் கயிற்றை விடுவித்தபோது ஒருவர் மட்டும் அதை பிடித்துக் கொண்டிருந்துள்ளார்.

இதனால் பட்டத்தோடு அவரும் மேலே பறக்க தொடங்கினார். எனினும் கயிறை விடாமல் அந்த இளைஞர் பிடித்துக் கொண்டிருந்தார். உயர பறந்த பட்டம் மீண்டும் தாழ பறந்தபோது நிலத்திற்கு அருகில் வந்ததும் கயிற்றை விட்டு கீழே விழுந்த இளைஞர் சிறிய காயங்களுடன் தப்பினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்