ஸ்பெயினில் பனி தரையில் நெருப்பு பற்றி கொள்ள, எரிந்த நெருப்பை தொடர்ந்து பசும் புற்கள் காட்சியளிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலகம் முழுவதும் ஊரடங்கினால் வீடுகளில் அடைந்துள்ள நிலையில் ஒரு சில வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஆள் நடமாட்டமற்ற தெருக்களில் திரியும் காட்டு மிருகங்கள், பேய்கள் மற்றும் ஏலியன்களை தாண்டி சில ஆச்சர்ய வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
சமீபத்தில் ஸ்பெயின் சுற்றுசூழல் பகுதி ஒன்றில் புல்பரப்பில் தீப்பற்றி கொண்டதாக வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது. அதில் பனிப்போன்ற வெண்பரப்பை நெருப்பு எரித்துக்கொண்டு செல்ல எரிந்த பகுதிகள் கருகி போவதற்கு பதிலாக பசுமையான புற்கள் தென்படுகின்றன. இந்த வீடியோவை பகிர்ந்துள்ள பலர் இது ஏதாவது கிராபிக்ஸ் ட்ரிக்காக இருக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆனால் ஒரு சிலர் அது கிராபிக்ஸ் அல்ல என்று மறுத்துள்ளனர். ஸ்பெயினில் உள்ள சில வகை மரங்களின் விதைகள் வெடித்து புல்பரப்பில் வெண்மையான படலமாக பரவியுள்ளதாகவும், மேல் பரப்பில் உள்ள விதைகள் எரிந்து போவதால் அதற்கு கீழே உள்ள புல்பரப்பு தெரிய தொடங்குவதாகவும் கூறியுள்ளனர்.
Fire in spain burns without harming grass and trees .