கொரோனாவின் அசுர பாய்ச்சல் ஏன்? சென்னை விரைகிறது டெல்லி க்ரூ!!

Webdunia
புதன், 13 மே 2020 (12:28 IST)
சென்னையில் ஏன் இந்த கொரோனாவின் அசுர பாதிப்பு என கள ஆய்வு மேற்கொள்ள டெல்லி குழு மீண்டும் சென்னை விரைகிறது. 
 
மூன்றாம் கட்ட ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் 8 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தலைநகரான சென்னையில் மட்டும் பாதிப்புகள் 5 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
 
சென்னையில் இதுவரை மொத்தமாக 4,882 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 814 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக ராயபுரத்தில் 828 பாதிப்புகளும், கோடம்பாக்கத்தில் 796 பாதிப்புகளும், திருவிக நகரில் 622 பாதிப்புகளும் பதிவாகியுள்ளன. 
 
இந்நிலையில், கடந்த மாதம் 24 ஆம் தேதி வந்து சென்னையின் நிலை குறித்து அறிக்கை சமர்பிக்க சென்ற டெல்லி சிறப்பு குழு இன்று மீண்டும் சென்னை விரைகிறது. இந்த முறை சென்னையில் முகாமிட்டு அதிக பாதிப்பை கொண்ட பகுதிகளில் நேரடியாக கள ஆய்வு செய்ய உள்ளனர் குழுவில் உள்ள மெம்பர்கள். 
 
மேலும், தொற்று அதிகரிக்க காரணம் என்ன? சிகிச்சை முறைகள் என்ன? பரவலை எப்படி குறைப்பது எனவும் ஆய்வு செய்ய உள்ளனர் என தகவல் தெரிய வந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்