உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸால் ஆரம்பத்தில் வெகுவாக சீனா பாதிக்கப்பட்டாலும், பிறகு மெல்ல கட்டுப்பாட்டுக்குள் வர தொடங்கியது. ஆனால் இத்தாலி மற்றும் ஸ்பெயினில் நிலைமை கட்டுக்கடங்காதவாறு அதிகரித்தன. அதை தொடர்ந்து அமெரிக்காவில் பாதிப்பு அதிகமானதால் அது முன்னிலையை அடைந்தது. தற்போது அதிகமான பாதிப்பினால் அமெரிக்காவின் எண்ணிக்கையை நெருங்கி வருகிறது ரஷ்யா.
ரஷ்யாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 11,565 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ரஷ்யாவின் மொத்த பாதிப்பு 2, 21, 344 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 2,009 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 39, 801 பேர் குணமடைந்துள்ளனர்.