நிருபரின் மைக்கை கடித்த மலைப்பாம்பு; வைரல் வீடியோ

Arun Prasath
செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (14:47 IST)
வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

ஆஸ்திரேலியாவின் பிரபல தொலைக்காட்சி செய்தி நிறுவனத்தில் பணிபுரியும் நிருபரின் கையில் வைத்திருந்த மைக்கை மலைப் பாம்பு ஒன்று கடித்த வீடியோ வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த 9 நியூஸ் சேனல், பாம்பு பாதுகாப்பு குறித்த ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது. இதில் விஷம் இல்லாத சிறிய மலைப்பாம்பு ஒன்றை பெண் நிருபரின் தோளில் வைக்கப்பட்ட ஒளிபரப்பப்பட்டது.

இந்நிலையில் பெண் நிருபர் வைத்திருந்த மைக்கை பாம்பு மூன்று முறை கடித்தது. இதனால் அப்பெண் நிருபர் பயந்துக்கொண்டே அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்