BSNL 4G - ரெண்டு புதிய ரீசார்ஜ் ப்ளான் அறிமுகம்!!

Webdunia
செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (14:43 IST)
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக 4ஜி சேவையில் இரண்டு ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. 
 
பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் 3ஜி சேவையையே வழங்கி வருகிறது. ஆனால் இப்போதுள்ள 3ஜி ஸ்பெக்ட்ரத்தை பயன்படுத்தி தேர்தெடுக்கப்பட்ட வடங்களில் 4ஜி சேவைகளையும் வழங்கி வருகிறது.
 
அத்னபடி, பிஎஸ்என்எல் 4ஜி சேவையானது தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மற்றும் தெலுங்கானா, கொல்கத்தா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கர்நாடகா, குஜராத் போன்ற பகுதிகளில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தற்போது இந்த 4ஜி சேவையில் இரண்டு டேட்டா ரீசார்ஜ் பேக்குகளை அறிமுகம் செய்துள்ளது. அவை, ரூ.96 மற்றும் ரூ.236 என்கிற இரண்டு திட்டங்கள் ஆகும். 
 
1. ரூ.96 திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 10 ஜிபி டேட்டா,  28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 
2. ரூ.236 திட்டத்தில் தினசரி 10ஜிபி டேட்டா,  84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்