புறாக்கள் மூலம் போதை மாத்திரை விற்பனை

Webdunia
திங்கள், 22 மே 2017 (17:53 IST)
குவைத் நாட்டில் கடத்தல்காரர்கள் நூதன முறையில் போதை மாத்திரைகள் புறா முதுகில் பதுக்கி வைத்து விற்பனை செய்து  வருகின்றனர்.


 

 
அரபு நாடுகளில் ஒன்றான குவைத் நாட்டில் பல்வேறு கட்டுபாடுகள் உண்டு. அரசு விதிமுறைகள் மீறினால் மரண தண்டனை விதிக்கப்படுவது வழக்கம். இந்நாட்டில் மது மற்றும் போதை பொருட்கள் விற்பனைக்கு தடை உள்ளது. 
 
இந்நிலையில் போதை பொருட்கள் அதிக அளவில் விற்பனையாவது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் திவீர கண்காணிப்பில் ஈடுப்பட்டனர். போதை மாத்திரைகள் கடத்தல்காரர்கள் புறாவின் முதுகில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளனர்.
 
நேற்று கடத்தல்காரர்கள் புறாவோடு சேர்ந்து காவல்துறையினரிடம் சிக்கினர். இதையடுத்து காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.
அடுத்த கட்டுரையில்