பூமிக்கு நெருக்கமாக வரும் சனிக்கோள்! வெறும் கண்களால் பார்க்கலாமா?

Webdunia
திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (15:30 IST)
இன்று அரிய வானியல் நிகழ்வாக சனிக் கோள் பூமிக்கு அருகில் தெரியும் என வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வானில் பல அரிய நிகழ்வுகள் அவ்வபோது நடந்து வருகின்றன. அவற்றில் அரிய நிகழ்வாக இன்று சனிக்கோள் பூமிக்கு மிக அருகில் வருவதாக வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சூரிய குடும்பத்தில் வளையம் கொண்ட கோளான இது இன்று பூமியிடமிருந்து உள்ள தோராய தூரத்திலிருந்து சற்றே அருகே தென்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வை சாதாரண கண்களால் பார்க்க முடியும் என கூறப்பட்டுள்ளது. மேலும் சிறிய ரக பைனாக்குலரை பயன்படுத்தி பார்த்தால் சனிக்கோளின் வளையங்கள் வரை தெளிவாக பார்க்க முடியும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்