திடீரென இளஞ்சிவப்பு நிறத்தில் மாறிய ஏரிகள்! – அர்ஜெண்டினாவில் பரபரப்பு!

ஞாயிறு, 1 ஆகஸ்ட் 2021 (11:49 IST)
அர்ஜெண்டினாவில் இரண்டு ஏரிகள் திடீரென இளம் சிவப்பு நிறத்தில் மாறியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லத்தீன் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில் சுபு மாகாணத்தில் உள்ள இரண்டு ஏரிகள் திடீரென இளம் சிவப்பு நிறமாக மாறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

இந்நிலையில் ஏரியில் கலக்கும் ஆறுகள் அருகே உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளே ஏரியின் நிறம் மாற காரணம் என அப்பகுதி சுற்றுசூழல் ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்