அந்த ஊசிய போட்டீங்கன்னா குரங்கா மாறிடுவீங்க! – எச்சரிக்கும் ரஷ்யா!

Webdunia
வெள்ளி, 16 அக்டோபர் 2020 (13:17 IST)
கொரோனா பாதிப்புகளுக்கு உலக நாடுகள் தடுப்பூசி கண்டுபிடித்து வரும் நிலையில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி குறித்து ரஷ்யா பேசி வரும் தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் உலக நாடுகள் பல கொரோனாவை தடுக்க தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் ரஷ்யா இரண்டு கொரோனா தடுப்பூசிகளை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. அதேசமயம் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் கண்டுபிடித்துள்ள தடுப்பூசியும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசி குறித்து ரஷ்யா சர்ச்சைக்குரிய வகையில் பரப்புரைகளை விளம்பரப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமூக வலைதளங்களில் அது குரங்கு தடுப்பூசி என்றும், அந்த தடுப்பூசியை போட்டுக் கொண்டால் நீங்கள் குரங்காக மாறிவிடுவீர்கள் என்றும் ரஷ்ய ஊடகங்களும் கிண்டலடித்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்