ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் ’மணிப்பூர் கலவரம்’ குறித்து தீர்மானமா?.. இந்தியா விளக்கம்..!

Webdunia
வியாழன், 13 ஜூலை 2023 (09:47 IST)
’மணிப்பூரில் சில மாதங்களாக கட்டுக்கடங்காத கலவரம் நடந்து வரும் நிலையில் இது இந்தியா முழுவதும் மட்டும் இன்றி உலக அளவில் பேசப்படும் ஒரு விவாதமாக மாறி உள்ளது. 
 
இந்த நிலையில் ஐரோப்பிய நாடாளுமன்ற கூட்டத்தில் மணிப்பூர் கலவரம் குறித்து தீர்மானம் நிறைவேற்ற இடதுசாரி மற்றும் கிறிஸ்தவ குழுக்களின் உறுப்பினர்களைக் கொண்ட ஆறு நாடாளுமன்ற குழுக்கள் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
இந்தியாவில் உள்ள மணிப்பூரின் நிலைமை என்ற பெயரில் தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள நிலையில் இந்த தீர்மான கோரிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து இந்திய வெளியுறவு செயலாளர் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், இது முற்றிலும் எங்களது உள்நாட்டு விவகாரம் என்று அவர்களுக்கு தெளிவுபடுத்தி உள்ளோம் என்று கூறியுள்ளார் 
 
இந்த நிலையில் ஐரோப்பிய நாடாளுமன்ற குழுவின் நிர்வாகி ஒருவர் கூறிய போது மணிப்பூர் மோதல் குறித்து தீர்மானம் இயற்றும் ஐடியா  இல்லை என்று கூறியுள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்