ஜப்பான் சென்றடைந்த பிரதமர் மோடி

Webdunia
வெள்ளி, 19 மே 2023 (18:38 IST)
ஜப்பான் நாட்டில்  பிரதமர் புயூமோ கிஷிடா தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள ஹிரோஷிமா நகரில் ஜி-7 உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.

இந்த ஜி -7 கூட்டமைப்பில் உள்ள 7 நாடுகளின் ஜி7  உச்சி மாநாடு  இன்று தொடங்கி வரும் மே 21 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது.

இதில்,  உறுப்பு நாடுகளான கனடா,பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கலந்துகொள்கின்றன.

இந்த நிலையில், மேற்கண்ட 7 நாடுகள் இல்லாது இந்தியா, பிரேசில், இந்தோனேஷியா, தென்கொரியா, வியட்நாம், கமரோஸ், குக் தீவுகள் ஆகிய நாடுகளுக்கும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பாரத பிரதமர் மோடி இன்று காலை டெல்லியிலிருந்து ஜப்பான் நாட்டிற்குச் சென்றுள்ளார்.

மேலும், இந்த மாநாட்டில்,  இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், ஜப்பான் நாட்டு பிரதமர் புமியோ கிஷீடா ஆகிய தலைவர்களைச் சந்தித்துப் பேசவுள்ளார். இப்பயணத்தின்போது, பிரதமர் மோடியுடன் வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் சென்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்