பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல்: இம்ரான்கானின் 2 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

Webdunia
செவ்வாய், 2 ஜனவரி 2024 (07:44 IST)
பாகிஸ்தானில் வரும் பிப்ரவரி மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து இம்ரான் கான் போட்டியிட மனுக்கள் அளித்ததாகவும் ஆனால் அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான் பிரதமராக  இருந்த இம்ரான் கான் பதவி காலத்தில் பரிசு பொருட்களை பெற்றதாக வழக்கு தொடரப்பட்ட நிலையில் அவருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மேல்முறையீட்டில் அந்த சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டாலும் ரகசிய தகவல்களை அவர் கசியவிட்டதாக கூறி மீண்டும் கைது செய்யப்பட்டதால் அவர் தற்போது சிறையில் உள்ளார்.

 இந்த நிலையில்  இம்ரான் கான் ஐந்த ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட அந்நாட்டு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்த நிலையில் பிப்ரவரி 8ஆம் தேதி பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து சிறையில் இருந்து அவர் லாகூர் மியான்வாலி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த இரண்டு வேட்புமனுக்களையும் தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்