முதல்வருடன் ராமதாஸ் திடீர் சந்திப்பு: மக்களவைத் தேர்தலில் திமுகவுடன் கைகோர்க்கிறதா பாமக?

ஞாயிறு, 31 டிசம்பர் 2023 (11:09 IST)
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திடீரென சந்தித்துள்ளதை அடுத்து தமிழக அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது. 
 
திமுக கூட்டணியை பொறுத்தவரை விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட் , காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து இருக்கும் என்றும் இந்த வெற்றி கூட்டணியில் எந்த விதமான மாற்றமும் இருக்காது என்றும் கூறப்படுகிறது. 
 
ஆனால் அதே நேரத்தில் புதிய கட்சிகளை சேர்த்தால் தொகுதி பங்கீடுகளில் சிக்கல் வரும் என்பதால் வேறு கட்சிகள் இணைய வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் நேற்று திடீரென தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை டாக்டர் ராமதாஸ் சந்தித்து  ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கடிதம் கொடுத்துள்ளார். 
 
ஜாதி வாரி கணக்கெடுப்பு என்பது முதல்வரை சந்திக்க ஒரு காரணமாக இருந்தாலும் திமுக கூட்டணியில் பாமக இணைவதற்கான பேச்சுவார்த்தை நடந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஒருவேளை திமுக கூட்டணியில் பாமக இணைந்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியேறும் நிலை ஏற்படும் என்பதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்