வடகொரியாவில் அணு ஆயுத படைப்பிரிவு ரெடி!

Webdunia
திங்கள், 10 அக்டோபர் 2022 (13:01 IST)
வடகொரியாவில் அணு ஆயுத வல்லமைகொண்ட அணு ஆயுத படைப்பிரிவு தயாராக உள்ளது என தகவல்.


வடகொரியா முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போது ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தி உள்ளது. சமீபத்தில் 30க்கும் அதிகமான ஏவுகணை சோதனையை நடத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வரும் வடகொரியா கடந்த 10 நாட்களுக்குள் 5 முறை பாலிஸ்டிக் உள்ளிட்ட அபாயகரமான ஏவுகணைகளை சோதனை நடத்தியுள்ளது.

இந்நிலையில் வடகொரியா, 7 முறை ஏவி பரிசோதனை நடத்தப்பட்ட அணு ஆயுத பயிற்சி உண்மையான போர் திறன், நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள் எங்கு (அமெரிக்கா, தென்கொரியா) எந்த நேரத்தில் நிறுவப்பட்டிருந்தாலும் இருந்தாலும் அதை தாக்கி அழித்து துடைத்தெறியும் அணு ஆயுத வல்லமைகொண்ட அணு ஆயுத படைப்பிரிவு தயாராக உள்ளது என தெரிவித்துள்ளது. மேலும் இதனை அதிபர் கிம் பார்வையிட்டார் என வடகொரியா தெரிவித்துள்ளது.

சமீபத்தில் ஜப்பான் வான் பரப்பின் மேல் வடகொரியா பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை நடத்தியதால் ஜப்பானில் அவசர நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அண்டை நாடுகளை அச்சுறுத்தும் வகையில் தொடர்ந்து வடகொரியா செயல்பட்டு வருவதை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Edited By: Sugapriya Prakash

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்