தென்கொரியாவில் கமலா ஹாரிஸ் பயணம்.. அடுத்த நாளே ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா

வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (07:50 IST)
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தென்கொரியாவுக்கு பயணம் செய்த அடுத்த நாளே வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் வடகொரியா மற்றும் தென்கொரியா எல்லை பகுதியை சமீபத்தில் பார்வையிட்டார் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
இந்த நிலையில் கமலா வடகொரியா மற்றும் தென்கொரியா எல்லையை பார்வையிடச் சென்ற மறுநாளே வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன
 
இதுகுறித்து தென்கொரியா கூறியபோது வடகொரியா மிருகத்தனமான சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருவதாகவும் மனித உரிமை மீறல்களை செய்து வருவதாகவும் சட்டவிரோத ஆயுத திட்டத்தை செயல்படுத்தி வருவதாகவும் கூறி உள்ளது
 
இந்நிலையில் வடகொரியா முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போது ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தி உள்ளதாகவும், சமீபத்தில் 30க்கும் அதிகமான ஏவுகணை சோதனையை நடத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
கமலா ஹாரிஸ் தென்கொரியாவை விட்டு வெளியேறிய சில மணி நேரத்தில் வட கொரியா அடுத்தடுத்து ஏவுகணை சோதனை நடத்தியது வளைகுடா பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்