வடகொரியா மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை!

சனி, 1 அக்டோபர் 2022 (08:58 IST)
தென் கொரியா – அமெரிக்காவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தொடர்ந்து, பாலிஸ்டிக் ஏவுகணையை வடகொரியா சோதித்தது.


வடகொரியா முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போது ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தி உள்ளது. சமீபத்தில் 30க்கும் அதிகமான ஏவுகணை சோதனையை நடத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் தென்கொரியா இது குறித்து கூறியதாவது, வடகொரியா மிருகத்தனமான சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருவதாகவும் மனித உரிமை மீறல்களை செய்து வருவதாகவும் சட்டவிரோத ஆயுத திட்டத்தை செயல்படுத்தி வருவதாகவும் கூறி உள்ளது.

இதனிடையே வடகொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயாராகும் வகையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தொடர்ந்து, பாலிஸ்டிக் ஏவுகணையை வடகொரியா சோதித்தது.

தற்போது இன்று மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஜப்பானின் பிரத்தியேக பொருளாதார மண்டலங்களுக்கு வெளியே விழுந்ததாகத் தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்