வடகொரியா – தென் கொரியா இடையே நீண்ட காலமாகவே முட்டல் மோதல் இருந்து வரும் நிலையில் சமீபமாக வடகொரியா செய்த ஒரு செயல் தென்கொரியாவை கோபத்தின் உச்சத்திற்கே தள்ளியுள்ளது.
Garbage Balloons
உலக நாடுகளின் எச்சரிக்கையையும், அமெரிக்காவின் கண்டனத்தையும் ஒரு பொருட்டாக மதிக்காமல் தொடர்ந்து அணு ஏவுகணை சோதனைகளை நடத்தி குடைச்சல் கொடுத்து வரும் நாடு வட கொரியா. இதனால் வடகொரியாவை மிரட்டுவதற்காக அமெரிக்காவும், தென்கொரியாவும் இணைந்து போர் பயிற்சிகளில் ஈடுபடுவதும், பதிலுக்கு வடகொரியா ஏதாவது ஏவுகணைகளை ஏவி தென்கொரிய கடல் பகுதியில் விழ செய்து அச்சுறுத்துவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் தென்கொரியாவை தொல்லை செய்ய வடகொரியா புதிய ஐடியா ஒன்றை கண்டுபிடித்து செயல்படுத்தி வருகிறது. அதன்படி பறக்கும் ராட்சத பலூன்களில் பழைய ஷூ, ப்ளாஸ்டிக் குப்பைகள், மாட்டு சாணம் போன்றவற்றை நிரப்பி தென் கொரியா எல்லைக்குள் பறக்க விட்டு விடுகிறார்கள். அவை தென்கொரியாவிற்குள் பறந்து சென்று எங்காவது விழுந்து அசுத்தப்படுத்துகின்றன.
வடகொரியாவின் இந்த செயலால் தென்கொரியா தலைவலிக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் இந்த பறக்கும் குப்பை பலூன் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது வடகொரியா. குப்பைகளை சுத்தப்படுத்துவது எவ்வளவு கடினம் என்பதை இனியாவது தென்கொரியா உணர வேண்டும் என வடகொரியா தெரிவித்துள்ளது. அமெரிக்காவை உள்ளே அனுமதிப்பதைதான் வடகொரியா பூடகமாக கிண்டல் செய்வதாக கூறப்படுகிறது.