நைஜீரியாவில் கடத்தப்பட்ட இந்தியர்கள் விடுதலை!

Webdunia
திங்கள், 23 டிசம்பர் 2019 (12:12 IST)
கடந்த சில வாரங்களுக்கு முன்பு நைஜீரிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 3ம் தேதி ஹாங்காங் எண்ணெய் கப்பல் ஒன்று நைஜீரிய கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. அந்த கப்பலில் இருந்த 18 இந்தியர்கள் ஒரு வெளிநாட்டவர் உட்பட 19 பேர் கடத்தப்பட்டனர்.

இந்த சம்பவம் அறிந்த இந்திய தூதரகம் உடனடியாக நைஜீரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு இந்தியர்களை மீட்பதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கியது. அதை தொடர்ந்து நைஜீரிய அதிகாரிகளின் தொடர் தேடலுக்கு பிறகு இந்தியர்கள் கடத்தப்பட்ட இடம் கண்டறியப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டது குறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ள இந்திய தூதரகம் , இந்தியர்களை மீட்க உதவிய நைஜீரிய அதிகாரிகளுக்கும் நன்றிகளை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்