உலக நாடுகள் தங்கள் நாட்டு எல்லைகளை பாதுகாக்கவும், பிற நாட்டு அச்சுறுத்தலை தடுக்கவும் கப்பற் படை, விமான படை, தரை படை ஆகியவற்றை கொண்டுள்ளன. கடல் மார்க்கமாக இல்லாத சில நாடுகளில் மட்டும் கப்பற் படை இருப்பதில்லை.
அமெரிக்காவின் இந்த அறிவிப்பு உலக நாடுகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. நாடுகளுக்கு கடல், நிலம் மூலம் வரும் ஆபத்தை விட விண்வெளியிலிருந்து வரும் ஆபத்துக்கள் யூகிக்க இயலாதவை, தடுக்க முடியாதவை. அமெரிக்காவுக்கு போட்டியாக அதை எதிர்க்கும் நாடுகளும் விண்வெளி படை அமைக்க தொடங்கினால் விண்வெளியில் ஆதிக்கம் செலுத்துவது யார் என்ற போர் வெடிக்கலாம் என அஞ்சப்படுகிறது.