உலகளவில் எந்த நாட்டில் அதிகளவில் மரண தண்டனை விதிக்கப்படுகிறது?

சனி, 21 டிசம்பர் 2019 (17:50 IST)
கடந்த ஆண்டில் 690 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டிருப்பதாக மரண தண்டனைக்கு எதிரான பிரச்சாரம் செய்யும் சர்வதேச பொது மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டைவிட இது 30 சதவீதம் குறைவு.
 
2018ல் பதிவு செய்யப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றங்களில் 80 சதவீதம், நான்கு நாடுகளில் நடந்துள்ளது
1. இரான்
2. சௌதி அரேபியா
3. வியட்நாம்
4. இராக்
 
அரிதாக கடந்த நவம்பர் மாதம் வியட்நாம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவலில், கடந்த ஆண்டு 85 மரண தண்டனைகளை நிறைவேற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும், மரண தண்டனைகள் நிறைவேற்றப்படும் தகவல்கள் அரசு ரகசியமாகக் கருதப்படுவதால், முந்தைய ஆண்டுகளில் எவ்வளவு பேருக்கு தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன என்பது பற்றி நம்பகமான தகவல்கள் எதுவும் இல்லை.
 
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 46 சதவீதம் அதிகமாக மரண தண்டனைகள் நிறைவேற்றப் பட்டுள்ளன. ஜப்பானில் 15 பேர், பாகிஸ்தானில் 14க்கும் மேற்பட்டோர், சிங்கப்பூரில் 13 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. தாய்லாந்தில் 2009க்குப் பிறகு முதன்முறையாக மரண தண்டனை மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
அமெரிக்காவில், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, முந்தைய ஆண்டைக் காட்டிலும் சற்று அதிகமான எண்ணிக்கையில் மரண தண்டனை நிறைவேற்றப் பட்டுள்ளது. 2017ல் 23 என இருந்த இந்த எண்ணிக்கை 2018ல் 25 ஆக உயர்ந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்