குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து திமுக கூட்டணி பேரணி நடத்திய நிலையில், “இது பேரணி அல்ல, போர் அணி” என்று பேசியுள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி பேரணி நடைபெற்றது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்ற இந்த பேரணியில் திருமாவளவன், தயாநிதி மாறன், வைகோ, உள்ளிட்ட பல தலைவர் உட்பட பல அமைப்பினரும் கலந்துக்கொண்டனர். எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகையில் ஆரம்பித்த இந்த பேரணி ராஜரத்தினம் மைதானத்தில் முடிவு பெற்றது.
இதன் பிறகு மேடையில் பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின், “இங்கே நடந்தது பேரணி அல்ல போர் அணி” என கூறினார். மேலும் “குடியுரிமை சட்டத்தை வாபஸ் வாங்கும் வரையில் போராட்டம் நடைபெறும், இந்த பேரணிக்கு விளம்பரப்படுத்திய அதிமுகவுக்கு நன்றி” எனவும் தெரிவித்தார்.