வடகொரியா அணு ஆயுதங்களை அழிக்க இதுவே வழி: அமெரிக்கா வியூகம்!!

Webdunia
திங்கள், 6 நவம்பர் 2017 (17:24 IST)
வடகொரியாவின் அணு ஆயுதங்களை தாக்க புதிய வழி ஒன்றை கண்டறிந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. 


 
 
ஐநா மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வட கொரியா அடுத்தடுத்து அணு ஆயுத, ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதனால், வடகொரியா மீது பல பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
வடகொரியாவை அச்சுறுத்த தென் கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டது. 
 
இந்நிலையில் வடகொரியாவை தாக்குவதற்கு வியூகங்களை அமெரிக்க வகுத்து வருகிறது. தற்போது வடகொரியாவின் அணு ஆயுதங்களை தரைவழித் தாக்குதலால் மட்டுமே அழிக்க முடியும் என அதற்கான தீவிர முயற்சியில் அமெரிக்கா ஈடுப்பட்டு வருகிறது.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்