மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்: ஐஎஸ் அமைப்புக்கு டிரம்ப் எச்சரிக்கை

சனி, 4 நவம்பர் 2017 (14:46 IST)
சமீபத்தில் நியூயார்க் நகரில் சரக்கு லாரி ஒன்று பாதசாரிகள் மீது மோதியதில் 8 பேர் பலியாகினர், 11 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த கொடூர சம்பவம் குறித்து ஐஎஸ் அமைப்பு கூறியபோது, 'ஐஎஸ் அமைப்பின் போர் வீரர்களில் ஒருவர்தான் நியூயார்க் நகரத் தெருவில் தாக்குதல் நடத்தினார்” என்று குறிப்பட்டுள்ளது.



 
 
இதனால் கடும் ஆத்திரம் அடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், 'ஐஎஸ் அமைப்பு இதற்கு சரியான விலை கொடுக்க வேண்டிய நிலை வரும்' என்று தனது டுவிட்டர் பக்கத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் கடந்த இரண்டு நாட்களாக ஐஎஸ் அமைப்பில் நிலைகளின் மீது அமெரிக்க ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நியூயார்க் சம்பவத்திற்கு காரணமாக சபுல்லா சாய்போவ் என்பவர் கைது செய்யப்பட்டு அமெரிக்க போலீசாரல் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்