இறந்த குழந்தையின் உடலை பிரிட்ஜில் வைத்த தாய்

Webdunia
வியாழன், 7 டிசம்பர் 2017 (16:39 IST)
பெரு நாட்டில் உள்ள மருத்துவமனையில் தனது குழந்தையின் இறப்புச் சான்றிதழைக் கொடுக்க தாமதமாக்கியதால், தாய் இறந்த குழந்தையின் உடலை வீட்டு பிரிட்ஜில் வைத்துள்ளார். 
தென் அமெரிக்காவில் உள்ள பெரு மாகாணத்தை சேர்ந்த மோனிகா பலோமினா என்ற பெண்ணுக்கு கடந்த சனிக்கிழமை குழந்தை பிறந்தது.  பிறந்த குழந்தை சரியான வளர்ச்சியடையாததால் தீவிர சிகிச்சைக்குப் பின் திங்கட் கிழமை இறந்து விட்டது. பெரு நாட்டில் இறப்பு சான்றிதழ் கொடுத்த பிறகே இறுதி சடங்குகள் செய்ய முடியும்.
 
மருத்துவமனை பாதுகாவலர் கொடுத்த தொந்தரவினால் குழந்தையின் உடலை மோனிகா தனது வீட்டிற்கு எடுத்து சென்று விட்டார். அதனால் அவரால் சான்றிதழ் பெற முடியவில்லை. அவர் குழந்தையின் உடலை வீட்டு பிரிட்ஜில் வைத்துள்ளார்.
 
இதுகுறித்து மோனிகா மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. இந்த தவறிற்கான முழு பொறுப்பையும் மருத்துவமனை நிர்வாகம் ஏற்றுக்கொள்வதாகவும், காவலாளி மருத்துவமனை விதிமுறைகளை மீறியுள்ளார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்