2 மகள்களை கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் தள்ளிய தாய்....

Webdunia
செவ்வாய், 23 ஜனவரி 2018 (16:18 IST)
அர்ஜெண்டினாவில் 15 வயதான தனது மகளையும், மகள் முறையான தனது உறவினர் பெண்ணையும் தாய் ஒருவர் கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. 
 
42 வயதான அந்த பெண்ணுடன் அவளது மகள் மற்றும் உறவினர் பெண் ஒருவர் தங்கியிருந்தார். இந்த சிறுமிகளிடம் கவர்ச்சியான ஆடைகளை அணிய சொல்லியும், பாலியல் பொம்மைகளுடம் விளையாட சொல்லியும் கட்டாயப்படுத்தியுள்ளார்.
 
மேலும், அவ்வப்போது இரு சிறுமிகளையும் சிலருடன் உறவு மேற்கொள்ள அனுமதித்து பணம் பெற்றுள்ளார். இரு சிறுமிகளையும் மிரட்டி வரும் வாடிக்கையாளர்களிடன் தங்களுக்கு 18 வயதாகிவிட்டதாக கூறும்படியும் மிரட்டியுள்ளார். 

இந்த விஷயம் எப்படியோ போலீஸுக்கு செல்ல, அவர்கள் அந்த பெண்ணை கைது செய்துள்ளனர். மேலும், அந்த வீட்டில் இருந்து கைக்குழந்தை ஒன்றையும் மீட்டுள்ளனர். இந்த குழந்தை விபசாரத்தின் போது பிறந்ததா அல்லது யாருடையது என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்