2ஆண்டுகள் தாய்ப்பால் கட்டாயம்: சென்னை ஐகோர்ட் நீதிபதி அதிரடி

செவ்வாய், 2 ஜனவரி 2018 (23:55 IST)
ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்ப்பால் மிகவும் அத்தியாவசியமானது என்பதால் இதுகுறித்த விழிப்புணர்வை அனைத்து தாய்மார்களுக்கும் அரசு ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் பேறுகால விடுப்பு எடுத்த பெண் ஒருவருக்கு பேறுகால விடுமுறையை பணி நாளாக கணக்கில் சேர்க்க அனுமதி மறுக்கப்பட்டது

இதனை எதிர்த்து அந்த பெண் தொடரந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன், 'பேறுகால விடுப்பை பணிக்காலத்திற்கான கணக்கில் எடுத்துக்கொள்ளாததற்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் அந்த பெண் மேல்படிப்பு படிக்க விரும்பியதால் உடனடியாக அவரை மேற்படிப்பில் சேர்த்துக்கொள்ள உத்தரவிட்டார்.

அதுமட்டுமின்றி 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை தாய்ப்பால் வழங்குவதை அரசு கட்டாயமாக்க உத்தரவிட வேண்டும் என்றும் இதுகுறித்து ஜனவரி 22-ஆம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்