24 லட்சத்தை தாண்டிய கொரோனா நோயாளிகள்: உலக நாடுகள் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 20 ஏப்ரல் 2020 (07:52 IST)
24 லட்சத்தை தாண்டிய கொரோனா நோயாளிகள்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் ஆயிரக்கணக்கில் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,407,282 ஆக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு நாளும் சுமார் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு ஒரு லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 165,049 உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அமெரிக்காவில்தான் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மிக அதிகம் என்பதும் அங்கு 24 மணி நேரத்தில் 1997 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 764303 ஆக உயர்ந்துள்ளது என்பதும், அமெரிக்காவை அடுத்து கொரோனா வைரஸால்  இங்கிலாந்தில் 596 பேரும், இத்தாலியில் 433 பேரும் ஸ்பெயினில் 410 பேரும் பிரான்சில் 395 பேரும் 24 மணி நேரத்தில் பலிபலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் உலகம் முழுவதும் இருந்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அதன்பின் குணமடைந்தோர் எண்ணிக்கை 624,948 ஆக உயர்ந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்