அமெரிக்காவை தாக்க இருக்கும் மற்றுமொரு பெருந்துயர் - 520 ஆண்டுகளுக்குப் பின் நடக்க இருக்கும் அவலம்

சனி, 18 ஏப்ரல் 2020 (09:00 IST)
அமெரிக்காவை தாக்க இருக்கும் மற்றுமொரு பெருந்துயர்

அமெரிக்க வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு பெரும் வறட்சி ஏற்பட இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக இந்த வறட்சியானது அமெரிக்காவின் மேற்கு பகுதியைத் தாக்க இருக்கிறது. இந்த பெரும் வறட்சி இயற்கையான தொடர் நிகழ்வென்றும், இது 2000ஆம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டதென்றும், காலநிலை மாற்றம் இதனைத் துரிதப்படுத்துகிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்காவில் இதற்கு முன்பு 40 முறை வறட்சி ஏற்பட்டிருக்கிறதென்றும், அதில் 4 வறட்சிகள் பெரும் வறட்சி என்றும் கூறும் ஆராய்ச்சியாளர்கள். இவை 800, 1100, 1200 மற்றும் 1500 ஆகிய காலகட்டங்களில் ஏற்பட்டதாகக் கூறுகிறார்கள். இதன் காரணமாக மிக மோசமான அளவிற்குக் காட்டுத்தீ அதிகரிக்குமென்றும், முக்கிய நீர் நிலைகளான பொவெல் ஏரி மற்றும் மேட் ஏரி வற்றும் என்றும் கூறுகிறார்கள். இந்த ஆராய்ச்சி முடிவானது சயின்ஸ் சஞ்சிகையில் வெளியாகி உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்