கொரோனா வைரஸ்: சென்னை முதல் திருநெல்வேலி வரை - தமிழகத்தில் நடப்பது என்ன?

ஞாயிறு, 19 ஏப்ரல் 2020 (20:19 IST)

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு சமைத்த உணவு, மளிகை மற்றும் மருந்துப் பொருட்களை வழங்கும் தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் 48 மணி நேரத்திற்கு முன்னதாக மாநகராட்சி அலுவலர்களிடம் தகவல் தெரிவித்த பின் வழங்க வேண்டும் என ஆணையாளர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

ஆணையர் பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு அமைப்புகள் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஊரடங்கால் வேலை வாய்ப்பின்றி உள்ள தொழிலார்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றன. அவ்வாறு உதவிகள் வழங்கும் போது, 48 மணிநேரத்திற்கு முன்னதாக சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் தகவல் கொடுக்கவேண்டும். கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் முகமூடி, கையுறை மற்றும் சமூக இடைவெளியுடன் வழங்குவது அவசியமாகிறது. எனவே உணவுப் பொருட்களை வழங்க சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றவேண்டும்,'' என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்