ஜெர்மனியின் அடர்ந்த வனப்பகுதியில் தங்க புதையல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மில்லியன் கணக்கில் அந்த புதையல் விலை போகும் என கணக்கிடப்பட்டுள்ளது.
நாஜிகள் காலத்து தங்க புதையல் என அது கருதப்படுகிறது. ஜெர்மனியில் உள்ள பவேரியா பகுதியில்தான் புதையல் கண்டுபிடிக்கப்பட்டது.
புதையலில் குவியலாக தங்கம், வைரம் உள்ளிட்டவையும் அரிய ஓவியங்கள் மற்றும் தபால் தலைகள் என சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலான பொக்கிஷங்களும் உள்ளதாக தெரிகிறது.
தங்கப்புதையலை, புதையல் வேட்டைக்காரர் Hans Glueck என்பவர் கண்டுபிடித்துள்ளார். ஆனால் அந்த நிலத்தின் உரிமையாளர் புதையலை அங்கிருந்து மீட்க தடையாக இருப்பதால் புதையலை கண்டு பிடித்தும் அதை அனுபவிக்க முடியாத சோகத்தில் உள்ளார் Hans.