மெக்சிகோ சிறையில் துப்பாக்கிச்சூடு - 19 பேர் பலி

Webdunia
செவ்வாய், 3 ஜனவரி 2023 (20:35 IST)
மெக்சிகோ நாட்டில் சிவாடட் யுரேஸ்  என்ற பகுதியில் சிறைச்சலை இயங்கி வருகிறது.

இங்கு நேற்று முன் தினம் வழக்கம் போல் சிறைச்சாலையைச் சுற்றி போலீஸார் பணியாற்றிக் கொண்டிருக்கையில், ஒரு மர்ம நபர்கள்  உள்ளே நுழைந்தார்.

தங்கள்  கையில் வைத்திருந்த ஆயுதங்களுடன் அவர்கள் போலீஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

பதிலுக்கு போலீஸார் துப்பாக்கியால் சுடும் முன்னே அவர்கள் கொடூரமாக தாக்குதல் நடத்தியதில் பலர் காயமடைந்தனர்.

மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்10 போலீஸார், 4 கைதிகள் என மொத்தம் 14 பேர் பலியாகினர்.

13 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், இதில் 6 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

சிறையில் நடந்த தாக்குதலில் 19 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இந்த  தாக்குதலில் 24கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓடியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்