உண்மையை சொல்லுங்கள்: கொரோனா நிலவரம் குறித்து சீனாவுக்கு கொரோனா WHO வலியுறுத்தல்

செவ்வாய், 3 ஜனவரி 2023 (18:04 IST)
கொரோனா பாதிப்பு குறித்த உண்மை நிலையை சொல்லுங்கள் என சீனாவுக்கு உலக சுகாதார மையம் வலியுறுத்தி உள்ளது.
 
சீனாவில் கடந்த சில நாட்களாக கட்டுக்கடங்காமல் கொரோனா வைரஸ் பரவி வருவதாகவும் இதனால் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது 
 
ஆனால் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் குறித்த விவரங்களை சீன அரசு வெளியிடுவதை நிறுத்திக் கொண்டது. சீன ஊடகங்களும் இந்த தகவலை தெரிவிக்காமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் சீனாவில் கொரோனா பாதிப்பு குறித்த உண்மை நிலவரங்களை வெளியிடுமாறு சீன அரசை உலக சுகாதார நிலையம் வலியுறுத்தியுள்ளது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்