மாலத்தீவு அதிபர் இந்திய பிரதமரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்: எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தல்..!

Siva
புதன், 31 ஜனவரி 2024 (07:44 IST)
மாலத்தீவு அதிபர் இந்திய பிரதமர் மோடியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்துவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, இந்தியாவுக்கு எதிராக சில நடவடிக்கைகள் எடுத்திருந்தார் என்பதும்  இதையடுத்து அவருக்கு  எதிர்க்கட்சிகளால் நெருக்கடி அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில்  மாலத்தீவு அதிபரின் மோசமான நடவடிக்கை காரணமாக நாட்டின் சுற்றுலா துறையின் வருமானம் வீழ்ச்சி அடைந்து விட்டது என்றும்  இதற்கு இந்திய பிரதமர் மோடியை அவர் விமர்சனம் செய்ததே காரணம் என்றும் எதிர்கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் எந்த ஒரு நாட்டையும் குறிப்பாக அண்டை நாட்டுடன் உறவை பாதிக்கும் வகையில் மாலத்தீவு அதிபர் பேசக்கூடாது என்றும் நமது நாட்டிற்கு என்று சில கடமைகள் உள்ளது என்றும் எனவே இந்திய பிரதமர் மோடி மற்றும் இந்திய மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்டு இந்த பிரச்சனையை முடித்து வைக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் கூறி வருகின்றனர்.

ஆனால் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு சீன ஆதரவாளராக இருப்பதால் இந்திய பிரதமரிடம் மன்னிப்பு கேட்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்