மாலத்தீவு அதிபருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்: முக்கிய எதிர்க்கட்சி அதிரடி..!

Siva

செவ்வாய், 30 ஜனவரி 2024 (07:23 IST)
மாலத்தீவு அதிபர் கடந்த சில வாரங்களாக இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் அவரது பதவியை நீக்க முக்கிய எதிர் கட்சி தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாலத்தீவு அதிபராக சமீபத்தில் பதவியேற்ற முகமது முய்சு  சீன ஆதரவாளராக கருதப்படுகிறார். இந்த நிலையில் சமீபத்தில் மாலத்தீவு நாடாளுமன்றத்தில் மாலத்தீவு ஜனநாயக கட்சி எம்பி அகமது, தேசிய மக்கள் காங்கிரஸ் எம்.பி. அப்துல்லா ஷாஹீம் ஆகியோர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

இதனால் ஏற்பட்ட கைகலப்பில் காயமடைந்த ஷாஹீம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும்  இந்த மோதலின்போது மாலத்தீவு ஜனநாயக கட்சி எம்.பி.ஹசன் ஜரீருக்கும்  காயம் ஏற்பட்டது.

இந்த நிலையில்  நாடாளுமன்ற அவைத் தலைவர் முகமது அஸ்லாம், துணைத் தலைவர் அகமது சலீம் ஆகியோருக்கு எதிராக மாலத்தீவு முற்போக்கு கட்சி மற்றும் தேசிய மக்கள் காங்கிரஸ் கட்சியினர் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தனர்.

இந்தியாவுக்கு எதிரான நிலையை மாலத்தீவு அரசு கடைப்பிடித்து வருவதாகவும், இது மாலத்தீவுக்கும், மாலத்தீவு மக்களுக்கும் கேடு விளைவிக்கும் என்றும் அதிபருக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானத்தை கொண்டு வருவதாகவும் எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. இந்த தீர்மானம் வெற்றி பெற்றால் மாலத்தீவு அதிபரின் பதவி பறிபோகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்